தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/விவசாயிகள் மறியல் போராட்டம்

விவசாயிகள் மறியல் போராட்டம்

விவசாயிகள் மறியல் போராட்டம்


ADDED : அக் 22, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 07:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:இடது சாரி விவசாய சங்கங்கள் சார்பில், கிருஷ்ணராயபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடன்களை தேர்தல் வாக்குறுதிபடி, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் புதிய பயிர் கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழந்துள்ள விவசாய கூலி தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

இலவச மின்சாரத்தை முற்றிலும் ஒழித்து கட்டும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி ஆற்றில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மாநிலத்திற்கு தேவையான காவிரி நீர் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகே இடது சாரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாயனுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம்கைவிடப்பட்டது.

* குளித்தலை அடுத்த தோகைமலை பஸ் ஸ்டாண்டில், தமிழக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வலியுறுத்தி, தமிழ்நாடு இடது சாரி விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர்கள் வீரமலை, சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us