/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உழவரைத்தேடி உழவர் நலத்துறை திட்ட முகாம்
/
உழவரைத்தேடி உழவர் நலத்துறை திட்ட முகாம்
ADDED : ஜூன் 12, 2025 01:21 AM
கரூர், உழவரைத்தேடி உழவர் நலத்துறை திட்ட முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
'உழவரைத்தேடி உழவர் நலத்துறை' என்ற திட்டத்தின் கீழ், வேளாண்- உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், அனைத்து துறைகள் மற்றும் சார்பு துறைகளான கால்நடைத்துறை, கூட்டுறவு, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர், கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கும் முகாம் நடந்து வருகிறது. இதன்படி, நாளை (13ம் தேதி) கரூர் மாவட்டத்தில், 16 வருவாய் கிராமங்களில் முகாம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு, தங்கள் துறைக்கான திட்டங்களை எடுத்துக்கூறி விளக்கம் அளிப்பதோடு, அரசு திட்டங்களை விவசாயிகள் பெறுவதற்காக முன்பதிவும் செய்யப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.