தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜூன் 10, 2026 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த திம்மம்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரவணன், 45; கொத்தனார். இவரது மகள் அகிலா ஷர்மி, 21; பி.சி.ஏ., படித்துள்ளார். தற்போது, குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள தட்டச்சு பயற்சி மையத்திற்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு வழக்கம்போல் பயிற்சி மையத்திற்கு சென்றார்.

ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சரவணன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us