ADDED : செப் 19, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
குளித்தலை;குளித்தலை
அடுத்த மேட்டுமகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 37.
இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது தந்தை அங்கப்பன்,
69, கடந்த 14 காலை 7:45 மணியளவில் வீட்டில் இருந்து, ஆர்.டி. மலையில்
உள்ள தனியார் கிளினிக்கில் ரத்த பரிசோதனை செய்ய சென்றவர், வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித
தகவலும் கிடைக்கவில்லை. தனது தந்தையை காணவில்லை என மகன் கொடுத்த
புகாரின் படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி
வருகின்றனர்.
