ADDED : நவ 12, 2026 07:07 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த பூவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 57. கரூரில் உள்ள
தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 9ம் தேதி
மாலை பெரியசாமி சேங்கல் டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அவரை இளைய மகன் சிபி, திட்டியபடி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இரவு
வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்த போது, 10:45 மணியளவில்
பெரியசாமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த
தகவலும் கிடைக்கவில்லை. மகன் புருஷோத்தமன், 27, கொடுத்த புகாரின்படி
லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
