ADDED : அக் 29, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த பெரியசாமி, 69, தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி. கடந்த 26ம் தேதி காலை 7:00 மணியளவில் சைக்கிளில் சாப்பாடு பையுடன் வேலைக்கு சென்றார்.
மேட்டுமகாதானபுரம்-பழைய ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில், இரட்டை வாய்க்கால் அருகே அவர் எடுத்துச் சென்ற சைக்கிள், அதில் வைத்திருந்த சாப்பாடு சில்வர் வாளி ஆகியன இருந்தது. ஆனால் பெரியசாமியை காணவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது தந்தையை காணவில்லை என மகன் கார்த்திக், 36, கொடுத்த புகார்படி லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

