/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடுப்பு சுவர் இல்லாத தரைப்பாலத்தால் அச்சம்
/
தடுப்பு சுவர் இல்லாத தரைப்பாலத்தால் அச்சம்
ADDED : ஜூலை 13, 2025 01:23 AM
குளித்தலை, குளித்தலை சினிமா தியேட்டர் மற்றும் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தென்கரை பாசன வாய்க்கால் தரைப்பாலம் வழியாக மயானம், தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகர பகுதிக்கு செல்லவும், இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர், தடுப்பு கம்பி இல்லாமல் உள்ளது. இந்த பாலத்தில் டூவீலர் செல்வோர், சாகசம் செய்வதுபோல் சென்று வருகின்றனர். சற்று தவறினாலும் வாய்க்கால் தண்ணீரில் விழுந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்துக்கு முன், பாலத்துக்கு தடுப்பு கட்டைகள், தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.