/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:44 AM
கரூர், கரூர் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட அமைப்பாளர் சக்தி வேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம்
நடந்தது.
அதில், வருவாய் துறை அலுவலர்கள் மீது, தாக்குதல் நடத்துபவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கும் வகையில், பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், அனைத்து நிலையிலான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து பணியிடங்களையும், நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நடந்தது.
மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து, தலைமை தபால் நிலையம் வரை, வருவாய் துறை ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை விளக்க பேரணி
நடந்தது.