/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பங்களாபுதுார் பகவதியம்மன்கோவில் விழா கோலாகலம்
/
பங்களாபுதுார் பகவதியம்மன்கோவில் விழா கோலாகலம்
ADDED : மே 07, 2025 01:24 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, பொய்யாமணி பஞ்., பங்காளபுதுாரில் அமைந்துள்ள பகவதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த, 4ல், காவிரி ஆற்றில் இருந்து பொது மக்கள் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவில் முன் அமைக்கப்படும் தீக்குண்டத்தில், பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று காலை கிடா வெட்டுதலும், இரவு மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது.