/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அரசு திட்டங்கள் குறித்து அலுவலர் குழுவினர் கள ஆய்வு
/
மத்திய அரசு திட்டங்கள் குறித்து அலுவலர் குழுவினர் கள ஆய்வு
மத்திய அரசு திட்டங்கள் குறித்து அலுவலர் குழுவினர் கள ஆய்வு
மத்திய அரசு திட்டங்கள் குறித்து அலுவலர் குழுவினர் கள ஆய்வு
ADDED : பிப் 15, 2024 09:17 PM
கரூர்:கரூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மத்திய அரசின் துாய்மை பாரத இயக்கம், ஜல் சக்தி அபியான் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகளின் செயல்பாடுகளை, கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் அலுவலர் குழுவினர் களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் நாளை வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட, 16 பஞ்சாயத்துகளில் துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திட, திரவக்கழிவு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை தக்க வைத்தல் தொடர்பாகவும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊரக பகுதிகளில் உள்ள, தனிநபர் இல்ல குடியிருப்புகளுக்கு தரமான குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் பொதுமக்களிடம் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.