ADDED : ஏப் 06, 2026 06:22 AM
கரூர்:தமிழகத்தில்,
வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்
செய்ய, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்,
கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம், குளித்தலை சப்-கலெக்டர்
அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அனைத்து தொகுதிகளில்,
அ.தி.மு.க.,-தி.மு.க.,-த.வெ.க.,-நா.த.க., உள்பட பல்வேறு கட்சிகளை
சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை, கரூர் தொகுதியில்,
80 பேரும், அரவக்குறிச்சியில், 18 பேரும், கிருஷ்ணராயபுரத்தில்,
23 பேரும், குளித்தலையில், 28 பேரும் என, மொத்தம், 149 பேர் வேட்பு மனு
தாக்கல் செய்துள்ளனர்.
இன்று, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
மதியம், 3:00 மணிக்குள் தேர்தல் அலுவலக அறைக்குள் சென்றுவிட வேண்டும்.
3:00 மணிக்கு தேர்தல் அலுவலர் அலுவலக அறையின் பிரதான வாயில்
மூடப்பட்டுவிடும். 3:00 மணிக்குள் அவரது அலுவலகத்திற்குள்
வருபவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
