/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பேவர் பிளாக் பதிக்க நிதி உதவி
/
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பேவர் பிளாக் பதிக்க நிதி உதவி
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பேவர் பிளாக் பதிக்க நிதி உதவி
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பேவர் பிளாக் பதிக்க நிதி உதவி
ADDED : ஏப் 30, 2025 01:06 AM
கரூர்:
புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பேவர் பிளாக் பதிப்பதற்கு நிதியுதவியாக, 3.50 லட்சம் ரூபாய், டி.என்.பி.எல்., நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆலையை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சை புகளூர் ஆகிய பகுதிகளில் கல்வி வளர்ச்சிக்கும், அரசு
பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடவும், பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மூலம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட, புகழூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்காக, பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மேடையின் முன்புறம் பேவர் பிளாக் பதிப்பதற்கு நிதியுதவியாக, 3.50 லட்சம் ரூபாயை காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதியிடம் வழங்கினார்.