/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிதி நிறுவனம், வீட்டின் பூட்டை உடைத்து பணம், கேமரா திருட்டு
/
நிதி நிறுவனம், வீட்டின் பூட்டை உடைத்து பணம், கேமரா திருட்டு
நிதி நிறுவனம், வீட்டின் பூட்டை உடைத்து பணம், கேமரா திருட்டு
நிதி நிறுவனம், வீட்டின் பூட்டை உடைத்து பணம், கேமரா திருட்டு
ADDED : ஏப் 23, 2025 02:03 AM
கரூர்,:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வடுகப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 30; கரூர் தமிழ் நகரில், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த, 20ல், நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு, கலெக்ஷனுக்கு சென்று விட்டார். அப்போது, நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். பிறகு, நிதி நிறுவனத்தில் இருந்த, ஒரு லட்ச ரூபாயை திருடி சென்று விட்டனர். அதேபோல், நிதி நிறுவனம் அருகில் பூட்டப்பட்டிருந்த, சிவக்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு 'சிசிடிவி' கேமராக்களை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, நிதி நிறுவன அதிபர் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.