/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
/
காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
ADDED : அக் 04, 2025 01:03 AM
கரூர் கரூரில் கடந்த அக்., 2ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், தனலட்சுமி, கணேசன் ஆகியோர் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு விடுமுறை அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுகிறதா என, கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு விடுதிகள், பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆய்வு செய்யப்பட்ட, 65 நிறுவனங்களில், 41ல், முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, முரண்பாடு கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு, உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.