/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் தீ விபத்து பா.ஜ., சார்பில் நிவாரணம் வழங்கல்

ADDED : ஜூலை 16, 2025 02:05 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை தெற்கு கள்ளப்பள்ளி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில் கடந்த, 13ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் மற்றும் பள்ளி சான்றிதழ்கள், பணம், இதர முக்கிய பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் வீடுகளை இழந்த செல்வராஜ் பிரியா, கோபி கார்த்திகா, பொன்னுசாமி பாப்பாத்தி ஆகியோருக்கு கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள், உடைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பா.ஜ., தலைவர் ராஜவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன், மெடிக்கல் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.