ADDED : பிப் 23, 2026 06:30 AM
கரூர்; கரூர் ஐந்து ரோட்டில் இருந்து, வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனி அருகில், மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாந-கராட்சியில், 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்-புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கிடங்கில் குப்பை கொட்டப்-பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இந்நிலையில், நேற்று குப்பை கிடங்கில் தீ வி-பத்து ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி பணியா-ளர்கள் உடனடியாக குப்பை கிடங்கிற்கு சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலம் பல்வேறு குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வி-பத்தின் போது, கரூர்- -வாங்கல் சாலையில், புகை மூட்டமாக காட்சியளித்தது.

