சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு தீ விபத்து விழிப்புணர்வு பயிற்சி
சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு தீ விபத்து விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜன 07, 2026 06:43 AM

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்-லைக்குட்பட்ட, ஆண்டிப்பட்டி கோட்டை அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பணிபுரியும் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி, விழிப்புணர்வு நடத்தப்பட்-டது. அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகி-ருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் காரணங்கள், தீ பரவும் விதம், தீயை ஆரம்ப நிலையிலேயே கட்-டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தீ அணைப்பான் பயன்படுத்தும் முறைகள் குறித்து, செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மின்சார கோளாறு, எரி-வாயு கசிவு போன்ற காரணங்களால் ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது, அவசர காலங்களில் மனிதர்களை பாதுகாப்-பாக மீட்பது, விபத்து நேரங்களில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கும் நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
