ADDED : ஜூன் 25, 2026 04:10 AM

கரூர்:கரூர்
அருகே, தையல் யூனிட் நிறுவனத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
மாவட்டம், தான்தோன்றிமலை அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 52;
இவர், தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் நகரில் கடந்த, 10 ஆண்டுளாக டெக்ஸ்டைல்ஸ்
நிறுவனங்களுக்கு, ஆர்டர்களை செய்து தரும் வகையில், தையல் யூனிட் நிறுவனம்
நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை மின் கசிவு காரணமாக, தையல்
யூனிட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு
வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், தீ விபத்தில் சில தையல் இயந்திரங்கள்
சேதம் அடைந்தது. தான்தோன்றிமலை போலீசார், சேத மதிப்பு குறித்து
விசாரிக்கின்றனர்.
* கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகில், ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) மற்றும்
ஏ.டி.எம்.,
அறை உள்ளது. நேற்று மதியம் ஏ.டி.எம்., அறையில் இருந்து, திடீரென புகை
வெளியேறியது. இதையடுத்து, கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று, புகையை
கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால், ஏ.டி.எம்., மற்றும்
அதில் இருந்த பணம் தப்பியது. ஏ.சி., மெஷினில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக,
ஏ.டி.எம்., அறையில் புகை ஏற்பட்டதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
