/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் பாடி நிறுவனத்தில் தீ; வெல்டிங் தொழிலாளி கருகி சாவு
/
கரூர் பஸ் பாடி நிறுவனத்தில் தீ; வெல்டிங் தொழிலாளி கருகி சாவு
கரூர் பஸ் பாடி நிறுவனத்தில் தீ; வெல்டிங் தொழிலாளி கருகி சாவு
கரூர் பஸ் பாடி நிறுவனத்தில் தீ; வெல்டிங் தொழிலாளி கருகி சாவு
ADDED : நவ 15, 2024 07:05 AM
கரூர்: கரூரில், பஸ் பாடி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார். இரு தொழிலாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கரூர் தான்தோன்றிமலையில், ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளியணை செல்லாண்டிபட்டி அருகில் குமாரபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 40; வெல்டர். இவரும், வட மாநில தொழிலாளர் இருவர் என மூன்று பேர் நேற்று மாலை, 5:30 மணிக்கு பஸ்சில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தினர்.
அப்போது, வெல்டிங்கில் ஏற்பட்ட தீப்பொறி திடீரென பற்றிக் கொண்டது. மிகவும் வேகமாக எரிய தொடங்கியதால், வடமாநில தொழிலாளர் இருவர் பஸ்சில் இருந்து வெளியே ஓடி வந்து விட்டதால், சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பஸ்சில் இருந்து ரவிச்சந்திரன் வெளியே வருவதற்குள் தீ பரவியது. அதில், உடல் முழுவதும் தீப்பற்றி கொண்டதால், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது.
கரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் திருமுருகன் தலைமையில், வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ரவிச்சந்திரன் உடலை மீட்டனர். சம்பவ இடத்தை டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.