காகித ஆலையில் தீ விபத்து பேப்பர் ரோல்கள் எரிந்து நாசம்
காகித ஆலையில் தீ விபத்து பேப்பர் ரோல்கள் எரிந்து நாசம்
ADDED : மார் 21, 2026 06:43 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் அருகே, காகித ஆலை குடோனில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, பேப்பர் ரோல்கள் எரிந்து நாசமானது.
கரூர் மாவட்டம், புகழூரில் அரசின் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) செயல்படுகிறது. அதில், பேப்பர் ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில், நேற்று அதிகாலை மின் கசிவு கார-ணமாக தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் மற்றும் கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், தீ மேலும் பர-வாமல் தடுக்கப்பட்டது.
பேப்பர் ரோல்கள் இருந்த குடோனில் ஏற்பட்ட, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ விபத்தில் எரிந்த, பேப்பர் ரோல்களில் மதிப்பு, பல லட்சத்தை தாண்டும் என தெரிகிறது.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
