/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்
/
கோவிலில் தீ விபத்து: உற்சவர் வாகனங்கள் சேதம்
ADDED : நவ 22, 2025 02:23 AM
கரூர், கரூர் அருகே, பிரசன்ன கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 4.50 லட்ச ரூபாய் மதிப்பிலான உற்சவர் வாகனங்கள் சேதமடைந்தன.
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி
கோவில் உள்ளது. அதில், உள்ள மகா மண்டபத்தில் கடந்த, 19 இரவு, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, நான்கு லட்சத்து, 50,000 ரூபாய் மதிப்பிலான உற்சவர் வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து, கோவில் உதவி ஆணையாளர் இளையராஜா அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் மீது டூவீலர் மோதி

