/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிசை வீட்டில் தீப்பிடித்து நாசம்
/
குடிசை வீட்டில் தீப்பிடித்து நாசம்
ADDED : பிப் 16, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட மஞ்சமேடு பகு-தியை சேர்ந்தவர் மணிவேல். குடிசை வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு, மணிவேல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அதிகமாக வீசிய காற்றால், குடிசையில் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்பட-வில்லை.

