/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிக வெப்பத்தினால் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து
/
அதிக வெப்பத்தினால் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து
ADDED : ஏப் 25, 2025 01:52 AM
குளித்தலை:
குளித்தலை அருகேயுள்ள, காவல்காரன்பட்டி பகுதியில், அதிக வெப்பத்தினால் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமானது.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்சாயத்து, காவல்காரன்பட்டியில் திருச்சி - தோகைமலை நெடுஞ்சாலையில் நேற்று மாலை, 5:45 மணியளவில் டிரான்ஸ்பார்மர் அதிகளவு வெப்பத்தினால் தீப்பற்றி எரிந்தது. பொது மக்கள் கொடுத்த தகவலின்படி, மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
காவல்காரன்பட்டி துணை மின்வாரிய உதவி பொறியாளர் தலைமையில், மின் இணைப்புகளை துண்டித்து, பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகளவு வெப்பம் தாக்கத்தால், டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. தீயை அணைத்த பிறகு, உடனடியாக பொது மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது.
A

