ADDED : ஆக 21, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
கரூர்:புகழூர்,
குளிர்ந்த மலை முனியப்பசாமி கோவில் அருகே, சாலையோரத்தில் குப்பை
கொட்டப்பட்டுள்ளது. அங்கு காய்ந்திருந்த செடி, கொடிகள்
தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
தொடர்ந்து குப்பையிலும் பற்றி
கொண்டது. அருகிலேயே டிரான்ஸ்பார்மர் இருந்ததால், பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது.
இதனால்
தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர்
(பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள், குப்பை, செடி, கொடிகளில்
எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து
கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
