/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 21, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு பேரணி, புகழூரில் நேற்று நடந்தது.
பேரணியை, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புகழூர் மேம்பாலம், சேலம் சர்வீஸ் சாலை, நகராட்சி அலுவலகம், மலைவீதி ரவுண்டானா வழியாக பேரணி சென்றது. அதில், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, அட்டைகளை தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்றனர்.
பேரணியில், மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர்கள் கோமதி, திருமுருகன், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.