/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் சர்க்கரை ஆலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
/
தனியார் சர்க்கரை ஆலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தனியார் சர்க்கரை ஆலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தனியார் சர்க்கரை ஆலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஏப் 25, 2025 01:26 AM
கரூர்:
கரூர் மாவட்டம், புகழூர் அருகில் செம்படாபாளையத்தில் உள்ள, தனியார் சர்க்கரை ஆலையில், மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் தலைமை வகித்தார். தீ விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், விபத்தில் சிக்கியவர்கள் காப்பாற்றி கொள்வது குறித்தும், தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி, தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என விளக்கினர்.
நிகழ்ச்சியில், உதவி மாவட்ட அலுவலர் கோமதி, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.A