/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
/
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 01:46 AM
கரூர், க.பரமத்தி அருகில், பணபாளையத்தில், தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (லொகேஷன்) முதுநிலை மேலாளர் துஷார்தேவகுலே தலைமை வகித்தார். கரூர் அருகில், ஆத்துாரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு
சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. இதற்கு கேரளா மாநிலம், கொச்சினிலிருந்து, 293 கி.மீ., துாரம் கோவை வழியாக பைப் லைனில் ஆத்துாருக்கு கொண்டு வரப்பட்டு, சேமித்து இங்கிருந்து, 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகிறது.
இங்கு, தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நேற்று நடந்தது. பைப் லைன்ககளில் உடைப்பு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், பைப் லைன் மேலாளர் சிஜின்
பிரசாத் ஆகியோர் பயிற்சி
அளித்தனர்.
நிகழ்ச்சியில், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க
இணை இயக்குனர் விமலா, துணை இயக்குனர் சுந்தரம்பிரபு, சப்-கலெக்டர் இளங்கோ, கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் கண்ணன், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உள்பட பலர்
பங்கேற்றனர்.