/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டாசு கடைகள் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலில் மக்கள்
/
பட்டாசு கடைகள் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலில் மக்கள்
பட்டாசு கடைகள் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலில் மக்கள்
பட்டாசு கடைகள் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலில் மக்கள்
ADDED : அக் 29, 2024 01:07 AM
பட்டாசு கடைகள் ஆக்கிரமிப்பு
போக்குவரத்து நெரிசலில் மக்கள்
கரூர், அக். 29-
கரூர், கோவை சாலையில் ஆக்கிரமித்து பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும், 31ல் கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்,- உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. பொதுமக்கள் தீபாவளி 'பர்சேஸ்' செய்வதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில், 80க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு கடை அமைக்க வேண்டும். இதில், பல கடைகள் உரிமம் பெறாமல் போடப்பட்டுள்ளது.
முக்கிய சாலையோரங்களில், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கரூர் மனோகரா ரவுண்டானாவில் இருந்து, கோவை சாலையோரம் வரை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையை ஆக்கிரமித்து, பட்டாசு கடைகள் வைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இடையூறாக உள்ள பட்டாசு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.