/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் மீட்பு
/
வீட்டில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் மீட்பு
ADDED : அக் 24, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, வீட்டில் புகுந்த கொம்பேறிமூக்கன் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
கரூர் அருகே மலையனுார் பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன், 50, விவசாயி. இவர் வீட்டில் யு.பி.எஸ்., மீது கொம்பேறிமூக்கன் பாம்பு இருந்துள்ளது. அதை பார்த்து பயந்த சாமியப்பன் அருகில் உள்ளவர்களை அழைத்து, பாம்பை விரட்டினார். ஆனால் அது வீட்டில் இருந்து வெளியேறவில்லை. பின்னர் புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், யு.பி.எஸ்., மீது படுத்து இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று பாம்பை விட்டனர்.

