ADDED : மே 27, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாரியம்மன் வான விழா டிரஸ்ட் சார்பில், அமராவதி ஆற்றில் இன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 10ல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று மாலை, மாரியம்மன் கோவிலில் இருந்து, கம்பம் ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரவு, 7:15 மணிக்கு அமராவதி ஆற்றில், மாரியம்மன் வான விழா டிரஸ்ட் சார்பில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. அதை கரூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்.
ஏற்பாடுகளை, வான விழா டிரஸ்ட் தலைவர் கருப்பசாமி, செயலாளர் முத்துகுமார், பொருளாளர் தனபதி மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
