பேச்சு போட்டியில் முதலிடம்; மாணவிகளுக்கு பாராட்டு விழா
பேச்சு போட்டியில் முதலிடம்; மாணவிகளுக்கு பாராட்டு விழா
ADDED : அக் 23, 2024 07:26 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தலைவர்களின் பிறந்தநாள் பேச்சு போட்டியில், குளித்தலை அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் பி.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி அனு, ஈவெரா குறித்த பேச்சு போட்டியில் முதல் பரிசும், பி.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி வினிதா, டாக்டர் அம்பேத்கர் குறி த்த பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றனர்.
மாணவிகளை பாராட்டி கல்லுாரியில் விழா நடைபெற்றது. பரிசு பெற்ற தமிழ்துறை மாணவிகள் அனு, வினிதா இருவரையும் கல்லுாரி முதல்வர் அன்பரசு பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் முனைவர் ஜெகதீசன், முனைவர் முருகானந்தம் மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
