/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
/
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 30, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் துவங்க உள்ளது. மேலும் தற்போது வரை கல்லுாரியில் சேர விண்ணப்பம் செய்-யாத மாணவர்களும், கல்லுாரியில் சேர்ந்து கொள்ளலாம் என, முதல்வர் வசந்தி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கடந்த ஜூன், 6- முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. கால நீட்டிப்பாக, 16ம் தேதி இறுதி கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், கல்லா-ரியில் முதலாம் ஆண்டு வகுப்பு இன்று துவங்க உள்ளது.