ADDED : அக் 21, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. கதவணை வழியாக மேட்டூர் அணையில் இருந்து, காவிரி நீர் டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் மாயனுார் கதவணை பகுதியில், சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். நேற்று ஜிலேப்பி மீன்கள் கிலோ, 100 ரூபாய், கெண்டை மீன் கிலோ, 70, பாறை மீன்கள் கிலோ, 130, விறால் மீன்கள் கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மீன்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.