ADDED : ஏப் 13, 2026 03:07 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
இந்த கதவணையில் சேமிக்கப்படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்துக்கொண்டு வந்து காவிரி கதவணை அருகே உள்ள கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதில், ஜிலேபி மீன் ஒருகிலோ, 120 ரூபாய், கெண்டை மீன், 90 ரூபாய், ஊசி மீன், 200 ரூபாய், விரால், 600 ரூபாய், பாறை, 220 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால், மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும், 300 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
