/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை ஜோர்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை ஜோர்
ADDED : ஜூலை 07, 2025 04:01 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்-படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்துக்-கொண்டு வந்து
விற்பனை செய்கின்றனர்.
தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மீன் பிடிக்கும் பணி மந்தமாக உள்ளது. இதனால், ஷட்டர் வழி-யாக செல்லும் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்-றனர். இதில், ஜிலேபி மீன் அதிகளவில் கிடைக்கிறது.
இது கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கெண்டை மீன் கிலோ, 100 முதல் 150 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், திருக்காம்புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, லாலாப்-பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் விற்பனை ஜோராக நடந்-தது.

