ADDED : ஆக 19, 2026 06:22 AM

கரூர்:கரூர்-திண்டுக்கல்
ரயில்வே இருப்பு பாதையின் கீழ், வெள்ளியணை அருகே
சின்னமநாயக்கன்பட்டி பிரிவில் இருந்து, கத்தளாப்பட்டி புதுார்
சாலையில், குகை வழிப்பாதை உள்ளது. அதன் வழியாக, 25க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, செல்லிபாளையம்,
கத்தாளப்பட்டி, கொங்குநகர், புதுார், சின்னதம்பிபாளையம் உள்ளிட்ட
பகுதிகளை சேர்ந்தவர்கள், ரயில்வே குகை வழிப்பாதை வழியாக டூவீலர்
மற்றும் கார்களில் செல்கின்றனர். இந்நிலையில், ரயில்வே குகை வழிப்
பாதையில், அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரியாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால்,
அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் பெரும்
அவதிப்படுகின்றனர். மேலும், குகைவழிப்பாதையை சுற்றியுள்ள காலி
இடங்களில், சமூக விரோதி
கள் இரவு நேரத்தில் மது அருந்தும்
செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சில சமயங்களில், வழிப்பறி
சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில்,
எரியாத மின் விளக்குகளை எரிய வைக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
