/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தரைத்தளம் சேதம்
ADDED : ஜூலை 12, 2025 01:37 AM
கரூர் :கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தின் தரைத்தளம் குண்டும், குழியுமாக உள்ளதால், ஊழியர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம், வணிகவரி அலுவலகம், ஆபீசர்ஸ் கிளப் மற்றும் ஆர்.டி.ஓ., முகாம் அலுவலகம் உள்ளது. தினமும் பல்வேறு பிரச்னைகளுக்காக பொதுமக்களும், அரசு ஊழியர்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தளம் பல மாதங்களாக, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. மேலும் பொதுமக்கள், பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே குண்டும், குழியுமாக உள்ள தரைத்தளத்தை புதிதாக அமைத்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடங்களை சீரமைத்து, மின் கம்பத்தில் விளக்குகளை புதிதாக அமைக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.