ADDED : பிப் 06, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கி.புரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், மாயனுார், தாளியாம்பட்டி, சேங்கல் ஆகிய பகுதி களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பூக்கள் சாகுபடிக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது வெயில் அடிப்பதால் செடிகளில் பூக்கள் பூத்து வருகிறது. பூக்கள் பறித்து கரூர், திருச்சி, முசிறி பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சின்னரோஜா கிலோ, 120 ரூபாய், செண்டுமல்லி கிலோ, 40 ரூபாய், விரிச்சிப்பூக்கள் கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.