ADDED : மார் 27, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கரூர்:வரத்து அதிகரிப்பால், கரூரில் பூக்கள் விலை குறைந்துள்ளது.
பங்குனி
மாதம் தொடங்கிய நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள்
குறைந்துள்ளன. இந்நிலையில், பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில்,
அதன் விலை குறைந்துள்ளது. கடந்த பிப்., மாதம் கரூர் ரயில்வே ஸ்டேஷன்
அருகே உள்ள பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,000 ரூபாய் வரை
விற்றது.
நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 600 ரூபாயாக குறைந்தது. 600
ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம், 200 ரூபாய், 700 ரூபாய்க்கு விற்ற ஜாதி
பூ, 250 ரூபாய்க்கு விற்றது. ரோஜா, 120 ரூபாய், சம்பங்கி, 200,
செவ்வந்தி, 180, மரிக்கொழுந்து ஒரு கட்டு, 50 ரூபாய், துளசி நான்கு
கட்டு, 40 ரூபாய்க்கு விற்றது.
