/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
/
கரூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
ADDED : ஆக 08, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளியை முன்னிட்டு, கரூர் மார்க்கட்டில் பூக்களின் விலை உயர்ந்தது.
தீர்க்க சுமங்கலியாக வாழ, லட்சுமி தேவியை வேண்டி இன்று பெண்கள், வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கின்றனர். ஆடி மாத வளர்பிறை கடைசி வெள்ளியன்று, இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்கின்றனர்.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, கரூர் பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ, 450 முதல், 500 ரூபாய்க்கும், முல்லை, 400 ரூபாய், மரிக்கொழுந்து ஒரு கட்டு, 100 ரூபாய், அரளி, 200, ரோஜா, 200, சிகப்பு ரோஜா, 250, சம்பங்கி, 300, ஜாதி மல்லி, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.