த.வெ.க., ஸ்டிக்கர் ஒட்டி வந்த வேன் ஆய்வு செய்த பறக்கும் படையினர்
த.வெ.க., ஸ்டிக்கர் ஒட்டி வந்த வேன் ஆய்வு செய்த பறக்கும் படையினர்
ADDED : மார் 27, 2026 05:52 AM

கரூர்:கரூர் அருகே, த.வெ.க., சின்னம், விஜய் படம் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு வரப்பட்ட, மாருதி வேனை பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்லில்
இருந்து, மாருதி வேன் ஒன்றை ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, த.வெ.க.,வினர்
நேற்று, கரூர் சுங்ககேட் பகுதிக்கு ஓட்டி வந்தனர். வேனை இயக்கும்
வகையில், தேர்தல் கமிஷன் அனுமதி பெறப்பட்டுள்ளதா என, தான்தோன்றிமலை
போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வேனுக்கு அனுமதி பெறவில்லை என
தெரியவந்தது. இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார், தேர்தல்
பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ
இடத்துக்கு சென்ற பறக்கும் படையினர், வேனை ஆய்வு செய்தனர்.
பிறகு, வேன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் போது, தேர்தல் கமிஷனில் அனுமதி பெற வேண்டும் என, கூறி விட்டு சென்றனர்.
வேனை தார்ப்பாயை போட்டு த.வெ.க.,வினர் மூடினர். இதனால், தான்தோன்றிமலை சுங்ககேட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
