/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆண் புள்ளி மான் இறப்பு வனத்துறை விசாரணை
/
ஆண் புள்ளி மான் இறப்பு வனத்துறை விசாரணை
ADDED : மே 11, 2024 07:28 AM
குளித்தலை, : குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பொது பணித்துறைக்கு சொந்தமான பெரிய குளம், 350 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் உள்ளது. இந்த குளத்தில், 50 க்கும் மேற்பட்ட மான்கள் வாழ்ந்து வருகின்றன. சமூக விரோதிகள், அவ்வப்போது மான்களை வேட்டையாடி வருகின்றனர்.
கடுமையான வறட்சியால், மான்களுக்கு தண்ணீர், இரை கிடைக்காமல் வழி தவறி பல்வேறு பகுதிகளுக்கு மான்கள் செல்கின்றன. இந்த மான்களை சமூக விரோதிகள் வேட்டையாடுகின்றனர். மேலும், சுற்றித்திரியும் நாய்களிடம் மான்கள் சிக்கிக் கொள்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நெய்தலுாரில் இரைக்காக வழிதவறி வந்த ஆண் புள்ளி மானை, பொது மக்கள் மீட்டு, வனத்துறை காவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, கடவூர் வனப்பகுதியில் விடப்பட்டது. நேற்று அதிகாலை, வடசேரி குளத்தில் விநாயகர் கோவில் அருகில் இறந்த நிலையில் ஆண் புள்ளி மான் கிடப்பது குறித்து, வி.ஏ.ஓ., கணேசன் கொடுத்த தகவல்படி, வனபாதுகாவலர் சிவரஞ்சனி இறந்த மானை கைப்பற்றினார். காவல்காரன்பட்டி உதவி கால்நடை மருத்துவர் புஷ்பலதா, மானை பிரேத பரிசோதனை செய்து, வன பாதுகாவலரிடம் ஒப்படைத்தார்.