ADDED : ஆக 30, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
நகராட்சி, தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர்,
கிருஷ்ணாபுரம் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வாக
இருந்தார். இவரது கணவர் ரவி, விவசாயி. கடந்த, ஓராண்டாக உடல் நலம்
பாதிக்கப்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை,
மாரடைப்பு ஏற்பட்டு ரவி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு, கரூர் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி,
முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், ஒன்றிய
செயலாளர்கள் கருணாகரன், விநாயகம், இளங்குமரன், சந்திரசேகரன்,
மாவட்ட பஞ்., குழு முன்னாள் தலைவர் கண்ணதாசன் மற்றும் அ.தி.மு.க.,
பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மாலை
அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
