/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
/
காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 20, 2025 01:35 AM
நாமகிரிப்பேட்டை,  ''தமிழகத்தில், காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை,'' என, முன்னாள் அ.தி.மு..க., அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன்  பஞ்சாயத்தில், மாவட்ட ஜெ., பேரவை  சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம்  நடந்தது.  இதில் பங்கேற்ற,  அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
தி.மு.க, ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பு  இல்லாமல் உள்ளது. கடந்த நான்காண்டு கால ஆட்சியில், அனைத்து தரப்பு மக்களுமே கஷ்டப்படுகின்றனர். நமக்கு பாதுகாப்பு கொடுப்பவர்கள் காவல்துறை, காவல்துறைக்கே இப்போது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.  இரண்டு தினங்களுக்கு முன் மதுரையில்  ஒரு காவல் நிலையத்தில், இருந்த இரண்டு போலீசாரை அடித்துவிட்டு காவல் நிலையத்தையே பூட்டி சென்றுள்ளனர்.  தி.மு.க..,  நிர்வாகிகள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டதால்தான், இன்று காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி  அமைய உறுதிமொழி ஏற்போம்.
இவ்வாறு பேசினார்.
ஜெ., பேரவை மாவட்ட செயலர் சந்திரசேகரன்  தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலர் சரவணன்,  எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலர் பிரபு உட்பட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

