/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் இடப்பிரச்னை மக்களை சந்தித்த 'மாஜி'
/
கோவில் இடப்பிரச்னை மக்களை சந்தித்த 'மாஜி'
ADDED : நவ 12, 2025 01:45 AM
கரூர், கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது.
கடந்த வாரம், கோவில் நிலங்களை மீட்க முயற்சி செய்யாத அதி-காரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். பின், நீதிமன்ற உத்தரவுப்படி இடங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு, தமிழ்நாடு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம் வடுகப்பட்டி, கரூர் வெண்ணைமலை ஆகிய பகுதியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்-கையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ''அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பிரச்னை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கு பின், நான்கரை ஆண்டுகளாக தி.மு.க., அரசு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பிரச்னை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்தார்.

