/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., ஆபீசில் கள ஆய்வு முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
/
அ.தி.மு.க., ஆபீசில் கள ஆய்வு முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
அ.தி.மு.க., ஆபீசில் கள ஆய்வு முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
அ.தி.மு.க., ஆபீசில் கள ஆய்வு முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : நவ 18, 2024 03:40 AM
கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், கள ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், வரும், 2026ல் நடக்கவுள்ள சட்-டசபை தேர்தலுக்காக, கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்ட-சபை தொகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். உறுப்பினர் அடையாள அட்டையை, 100 சதவீதம் வழங்க வேண்டும்.
தி.மு.க., அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து, நிர்-வாகிகள் பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகள் குறித்து, மாநில அ.தி.மு.க., பொருளாளர் சீனிவாசன் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சின்னச்சாமி, தங்கமணி, மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.