/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்னாள் எம்.பி., முத்துசாமி சிலை திறப்பு விழா
/
முன்னாள் எம்.பி., முத்துசாமி சிலை திறப்பு விழா
ADDED : பிப் 14, 2026 06:04 AM
கரூர்; கரூர் அருகே, முன்னாள் எம்.பி., முத்துசாமி சிலை திறப்பு விழா நடந்தது.
காவிரி மீட்பு குழு உறுப்பினரும், கரூர் முன்னாள் எம்.பி.,யுமான முத்துசாமி சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது.
அதில், வீடியோ கான்-பரன்ஸ் மூலம், புகழூர் அருகே வைரமடை கிரா-மத்தில், 50 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்-பட்டுள்ள, முன்னாள் எம்.பி., முத்துசாமி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, வைரமடையில் நடந்த விழாவில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அரவக்கு-றிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், புகழூர் தாசில்தார் பிரபா, பொதுப்-பணி துறை உதவி செயற்பொறியாளர் அனீஷா உள்பட பலர், முன்னாள் எம்.பி., முத்துசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

