/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாரி உரிமையாளரை மிரட்டிய வி.சி.க., மாஜி நிர்வாகி கைது
/
லாரி உரிமையாளரை மிரட்டிய வி.சி.க., மாஜி நிர்வாகி கைது
லாரி உரிமையாளரை மிரட்டிய வி.சி.க., மாஜி நிர்வாகி கைது
லாரி உரிமையாளரை மிரட்டிய வி.சி.க., மாஜி நிர்வாகி கைது
ADDED : டிச 17, 2024 01:53 AM
கரூர், டிச. 17-
கரூர் அருகே, டாரஸ் லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில், முன்னாள் வி.சி.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர், 41, டாரஸ் லாரி உரிமையாளர். இவரது டாரஸ் லாரியை கடந்த, 4ல் டிரைவர் பழனிசாமி என்பவர் ஓட்டி கொண்டு, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி, முன்னாள் துணை செயலாளர் ராஜா, 42, உள்பட பலர் டூவீலரில் சென்று டாரஸ் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பிறகு, டாரஸ் உரிமையாளர் சேகரை வரவழைத்து, கட்சி நிதியாக, 30 ஆயிரம் ரூபாயை ராஜா உள்ளிட்டவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் லாரி உரிமையாளர் சேகர், 4,000 ரூபாய் மட்டும் ஜி-பே மூலம் அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜா உள்ளிட்டவர்கள், சேகரை தகாத வார்த்தை பேசி மிரட்டினர்.
இதுகுறித்து சேகர் அளித்த புகார்படி, மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சி, முன்னாள் துணை செயலாளர் ராஜாவை நேற்று, வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.

