/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்
/
மாவட்டத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்
மாவட்டத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்
மாவட்டத்தில் நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்
ADDED : நவ 10, 2024 01:26 AM
மாவட்டத்தில் நான்கு நாட்கள்
வாக்காளர் சிறப்பு முகாம்
கரூர், நவ. 10-
கரூர் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு முகாம் வரும், 16, 17, 23, 24 ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் அக்.,29ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கிறது. இதில், 1.1.2025-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம். இதற்கான படிவத்தை தாலுகா அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வழங்கலாம். மேலும், தேசிய வாக்காளர் சேவை இணையதளமான https://voters.eci.gov.in/ அல்லது மொபைல் செயலியின் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இது தவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையில் பல்வேறு திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். மாவட்டத்திலுள்ள, 1,055 ஓட்டுச்சாவடி மையங்களில் வரும், 16, 17, 23, 24 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அறிக்கையில் தெரிவித்துள்ளதார்.