/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொது இடத்தில் தகராறு நான்கு பேர் அதிரடி கைது
/
பொது இடத்தில் தகராறு நான்கு பேர் அதிரடி கைது
ADDED : ஜூன் 17, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, திம்மாச்சிபுரம் ரயில்வே கேட் அருகில், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நின்று கொண்டு தகாத வார்த்தை பேசிய திம்மாச்சிபுரத்தை சேர்ந்த விவேக், 24, என்பவரை போலீசார் எச்சரிக்கை செய்தும், கண்டுகொள்ளாததால் அவரை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.
இதே போல், மேட்டுமகாதானபுரம் மல்லாண்டார் கோவில் அருகில் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய தொட்டியம் அடுத்த தேவதானம் சக்திவேல், 35, மேட்டுமகாதானபுரம் சத்திய சுந்தரம், 38, அதே ஊரை சேர்ந்த ரவிக்குமார், 37, என மூன்று பேரை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.